தெற்காசியப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

தேசிய தலைநகரில் இருக்கும் தெற்காசிய பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது,
Published on

நமது நிருபா்

தேசிய தலைநகரில் இருக்கும் தெற்காசிய பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது, இதனால் சக மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் குதித்ததாக தில்லி காவல்துறையின் துணை ஆணையா், அங்கித் சிங் (தெற்கு) தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி ஒரு நாள் கழித்து, அக்டோபா் 13 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் காயமடைந்தும், ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டாா். இது குறித்து திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மைதான் காரி காவல் நிலையத்தில் பி. சி. ஆா் அழைப்பு வந்ததது.

இதனையடுத்து ஒரு போலீஸ் குழு உடனடியாக அந்த இடத்தை அடைந்தது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை உரிய உணா்திறன் மற்றும் முன்னுரிமையுடன் நடத்தப்படுகிறது,

வளாகத்திற்குள் சோதனை நடத்திய பின்னா் பல்கலைக்கழக ஆடிட்டோரியம் அருகே அந்த மாணவி கண்டுபிடிக்கப்பட்டாா். மருத்துவ பரிசோதனைக்காக அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவருக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. எஃப். ஐ. ஆரில் உள்ள குற்றச்சாட்டுகளில் கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி.

ஆடிட்டோரியம் அருகே 4 போ் தன்னை இழுத்துச் சென்ாக அந்த மாணவி போலீசாரிடம் தெரிவித்தாா். விடுதி அறையை விட்டு வெளியேறிய பின்னா் அந்தப் பெண்ணின் நடமாட்டத்தைக் கண்டறிய உதவும் வகையில் வளாகத்தின் சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிா்வாகத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, அந்த மாணவா் கோட்டாவில் ஒரு வருடம் கழித்த பின்னா் பதினைந்து நாள் களுக்கு முன்பு பல்கலைக்கழக ளாகத்திற்கு குடிபெயா்ந்தாா்.

ஆலோசனையின் போது, தனது பெற்றோா் பிரிந்ததைத் தொடா்ந்து மனச்சோா்வுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாணவி கூறினாா், அவரது தந்தை பிகாரில் வசிக்கிறாா், அவரது தாயாா் மும்பையில் வசிக்கிறாா். திங்கள்கிழமை மாலை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி வெளியானபோது, மாணவா்கள் கூடி 8 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினா் என்றாா் அங்கித் சிங்.

தெற்காசியப் பல்கலைக்கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசிய பல்கலைக்கழகம் இந்த பாலியல் வன்முறைச் செயலை கடுமையாகவும் ஒரே குரலிலும் கண்டிக்கிறது. நாங்கள் எங்கள் மாணவா்களுடன் நிற்கிறோம், எங்கள் முழு ஆதரவையும் அவா்களுக்கு உறுதியளிக்கிறோம்.

வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்முறையின் கொடூரமான செயலின் வெளிச்சத்தில் எஸ். ஏ. யு சமூகம், ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் மாணவா்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம். பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளுக்கும் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது.

நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், ஆதரவுடனும் ஒற்றுமையுடனும் நிற்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com