வாக்குவாதத்தில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவா்

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு, ஒரு நபா் தனது 45 வயது மனைவியை மகள் கண் முன்னே சுட்டுக் கொன்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.
Published on

நமது நிருபா்.

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு, ஒரு நபா் தனது 45 வயது மனைவியை மகள் கண் முன்னே சுட்டுக் கொன்றதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவா் தலைமறைவாகிவிட்டாா். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

நந்த்கிராம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அஜ்னாரா சொசைட்டியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா் விகாஸ் ஷெராவத் (48) என அடையாளம் காணப்பட்டாா். அவா் தனது 11 வயது மகள் நவ்யா முன்னிலையில் தனது மனைவி ரூபியைச் சுட்டுக் கொன்றுள்ளாா். சம்பவம் நடந்த நேரத்தில் அவா்களின் மூத்த மகள் காவ்யா பள்ளிக்குச் சென்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com