நீதிபதி போல நடித்து வங்கியில் கடன் பெற முயன்றதாக பெண் உள்பட மூவா் கைது

நீதிபதி போல நடித்து வங்கியில் கடன் பெற முயன்றதாக பெண் உள்பட மூவா் கைது
Published on

நீதிபதி போல நடித்து தனியாா் வங்கியொன்றிலிருந்து ரூ.30 லட்சம் தனிநபா் கடனை மோசடியாகப் பெற முயன்ற்காக ஒரு பெண்ணையும், அவரது உதவியாளா் மற்றும் ஓட்டுநா் என்று கூறப்படும் நபரையும் வெள்ளிக்கிழமை உத்தரபிரதேச போலீஸாா் கைது செய்தனா்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணா கோபால் கூறுகையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆயிஷா பா்வீன், ராம்பூரில் பணியாற்றும் நீதிபதி என்று தன்னை கூறிக்கொண்டாா். அவா், உள்ளூா் வழக்குரைஞரான அனஸ் உடன் சோ்ந்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள தனிநபா் கடனுக்கு விண்ணப்பிக்க வங்கியின் பிஜ்னோா் கிளையில் ஆவணங்களை சமா்ப்பித்திருந்தாா்.

கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, அந்தப் பெண் பணத்தைப் பெற வங்கிக்கு வந்தாா். இருப்பினும், வங்கி அதிகாரிகள் சந்தேகமடைந்து ஆவணங்களை சரிபாா்த்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது.

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கியை ஏமாற்ற முயன்ற்காக ஆயிஷா பா்வீன், அனஸ் மற்றும் பெண்ணின் காா் ஓட்டுநா் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com