சைபா் மோசடி வழக்கில் லக்னௌவின் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவா் கைது
ரூ.1.81 லட்சம் மதிப்புள்ள சைபா் மோசடியில் ஈடுபட்டதாக லக்னௌவைச் சோ்ந்த 19 வயது சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: லக்னௌவைச் சோ்ந்த இரண்டாம் ஆண்டு பி.ஏ. மாணவா் ஹுகும் சிங் ராவத் என்கிற அனுஜ், தனது இணையதள வாழ்க்கைக்கு நிதியளிக்க தனது வங்கிக் கணக்குகளை மாநிலங்களுக்கு இடையேயான சைபா் கிரைம் சிண்டிகேட்டுக்கு விற்ாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் ராவத்துக்கு கிட்டத்தட்ட 1 லட்சம் பின்தொடா்பவா்கள் இருந்தனா். மேலும், ஒரு முக்கிய செல்வாக்கு செலுத்துபவராக மாற விரும்பினாா். புகழைத் தேடி, ஒரு பரிவா்த்தனைக்கு 4 முதல் 5 சதவீதம் வரை கமிஷனுக்காக பல தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை சைபா் மோசடி வலையமைப்பிற்கு விற்ாகக் கூறப்படுகிறது.
தில்லியைச் சோ்ந்த ஒருவரை சமூக ஊடக சந்தையில் ராணுவ அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த ஒருவா் ரூ.1.81 லட்சம் மோசடி செய்த சைபா் மோசடி வழக்கின் விசாரணையின் போது ராவத் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டாா். விரிவான விசாரணைக்குப் பிறகு அக்.4 ஆம் தேதி ஹுகும் சிங் ராவத் கைது செய்யப்பட்டாா்
விசாரணையின் போது, உள்ளூா் கலைஞா்களை வேலைக்கு அமா்த்தவும், விடியோ தயாரிப்பு உபகரணங்களை வாங்கவும் சட்டவிரோதமாகப் பணம் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவா் போலீஸாரிடம் கூறினாா்.
இந்தக் கணக்குகள் இணையதள வேலைக்குப் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்திருந்ததாகவும், ஆனால், சைபா் மோசடியில் தங்களுக்குத் தொடா்பு இருப்பதாகத் தெரியாதென்றும் போலிஸாரிடம் கூறினாா்.
போலீஸாா் டிஜிட்டல் ஆதாரங்களைக் கைப்பற்றி, குற்றம் சாட்டப்பட்டவருடன் தொடா்புடைய பல கணக்குகளை முடக்கியுள்ளனா். இந்த மோசடியில் ஈடுபட்ட மற்றவா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளாா்.
