திருநெல்வேலி, டிச. 11: இந்திய கடற்படையில் ஸ்டீவர்ட்ஸ், கூக் மற்றும் டோபாஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, திருநெல்வேலி முன்னாள் படைவீரர் நலம் உதவி இயக்குநர் வா.ஸ்ரீ. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய கடற்படையில் ஸ்டீவர்ட்ஸ், கூக், டோபாஸ் பணியிடங்களுக்கு 1.10.1990 முதல் 30.9.1994-க்குள் பிறந்தோர் விண்ணப்பிக்கலாம். ஸ்டீவர்ட்ஸ், கூக்-குக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
டோபாஸ் பதவிக்கு 6-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். உயரம் 157 செ.மீ. உயரத்துத்கேற்றவாறு மார்பளவு 5 செ.மீ. விரிவடைய வேண்டும் விண்ணப்பிக்க கடைசி நாள் 15.1.11.
கப்பல்படையில் செயிலர்ஸ் ஆர்ட்டிபிசியர் அப்ரென்டிஸ், சீனியர் செகன்டரி ரெக்ரூட்ஸ் பணிகளுக்கு மேல்நிலை வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் வேதியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸில் ஏதாவது ஒரு பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம் மதிப்பெண்களும், மேல்நிலை வகுப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
ஆர்ட்டிபிசியர் அப்ரென்டிஸýக்கு 1.8.1991 முதல் 31.7.1994-க்குள் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.1.11.
சீனியர் செகன்டரி ரெக்ரூட்ஸ்க்கு 1.8.1990 முதல் 31.7.1994-க்குள் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.10.
இப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இளைஞர்கள் மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் விதிமுறைகளை இணைய தளம் மூலம் பெற்று, விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அலுவலக வேலை நாள்களில் அணுகலாம் என்றார் அவர்.