குலசேகரம், டிச. 11: தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி திருவட்டாரில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் விவசாயிகளின் பட்டா நிலங்களை தனியார் காடுகளாக வரையறை செய்து, அவற்றை உரிமை மாற்றம் செய்ய முடியாத அளவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ டி. குமாரதாஸ் தலைமை வகித்தார்.
இதில் கடையல் பேரூராட்சித் தலைவர் அ. ஜார்ஜ் ஸ்டீபன், மாவட்ட காங்கிரஸ் செயலர் தங்கராஜ், மாவட்ட காங்கிரஸ் சேவாதளப் பிரிவு தலைவர் காட்வின், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலர் தங்கநாடார், ஐஎன்டியூசி அமைப்புச் செயலர் சி. அனந்தகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலர் எஸ். தாஸ், குலசேகரம் நகர காங்கிரஸ் தலைவர் எஸ். எபனேசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.