திருநெல்வேலி, டிச. 11: மானூர் அருகே தனியார் பஸ் நடத்துநர் ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மானூர் அருகேயுள்ள அழகியபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (36). தனியார் பஸ் நடத்துநராக இருந்த இவர் மனைவி சுப்புலட்சுமி. தம்பதியிடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
கணவருடன் ஏற்பட்ட தகராறில், சுப்புலட்சுமி தன் தாய் வீட்டுக்குச் சென்றாராம். வீட்டில் சனிக்கிழமை தனியாக இருந்த மாரியப்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். மானூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.