கோவில்பட்டி, டிச. 11: பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
மகாகவி பாரதியாரின் 129-வது பிறந்த நாளை முன்னிட்டு, எட்டையபுரத்திலுள்ள பாரதியார் இல்லம் மற்றும் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஸ்வரன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
கோவில்பட்டி கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், எட்டையபுரம் வட்டாட்சியர் அய்யாத்துரை, பேரூராட்சி நிர்வாக அலுவலர் உமர்முகைதீன், மக்கள் தொடர்பு அலுவலர் பால.சக்திதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பாரதியார் மணிமண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு மாவட்டத் தலைவரும், மாநில செயலருமான கே.சந்திரசேகர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
மாநில துணைத் தலைவர் தோத்தாத்திரி, மாவட்ட துணைத் தலைவர் விஸ்வநாதன், மாவட்டச் செயலர் சங்கரன், எட்டையபுரம் மகளிரணி செயலர் ராஜலட்சுமி, துணைத் தலைவர் கிரிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.