களக்காடு, டிச. 18: களக்காடு அருகே தண்ணீர் குடிக்க கால்வாயில் இறங்கிய மிளா தவறி விழுந்து இறந்தது.
இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து மிளாக்கள் இடம்பெயர்ந்து மலையடிவாரக் கிராமங்களுக்கு வருகின்றன.
சில ஆண்டுகளாக இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் மிளாக்கள் கிணறு, கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் விழுந்து இறந்து விடுகின்றன. இந்நிலையில், களக்காடு அருகேயுள்ள கங்கனான்குளம் மணிமுத்தாறு கால்வாயில் சனிக்கிழமை இறந்த நிலையில் ஆண் மிளா ஒன்று கரைஒதுங்கியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் மிளாவை மீட்டு களக்காடு மலைப்பகுதியில் புதைத்தனர். தண்ணீர் குடிப்பதற்காக கால்வாயில் இறங்கிய தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.