சங்கரன்கோவில், டிச. 18: சங்கரன்கோவிலில் ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்து அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார்.
சட்டப் பேரவைத் தொகுதி செயலர் எஸ்.டி. சங்கரகுமார், இணைச் செயலர்கள் சுப்பிரமணியன், இ. வேலுச்சாமி, மேலநீலிதநல்லூர் ஒன்றியச் செயலர் எஸ். முருகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், நடிகர் எஸ். ஆனந்தராஜ், சொ. கருப்பசாமி எம்எல்ஏ, நகரச் செயலர் கே. கண்ணன் உள்பட பலர் பங்கேற்றுப் பேசினர்.
முன்னாள் எம்எல்ஏக்கள் சுப்பையாபாண்டியன், சங்கரலிங்கம், பேரவை மாவட்ட துணைத் தலைவர் பி. தனபால்,வி. சுப்பிரமணியம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் மு. நயினார், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலர் கு. மகாராஜன், மாநிலப் பேச்சாளர்கள் செ. குணசேகரன், லட்சுமணன், கணபதி, மேலநீலிதநல்லூர் ஒன்றியச் செயலர் எஸ். முருகையா, பட்டுசங்கர், ராமநாதன், கோட்டிலிங்கம், கோவிந்தன், நகராட்சி உறுப்பினர்கள் ஆறுமுகபாண்டியன், பேச்சிமுத்து, ஆறுமுகம், குமாரவேலு கலந்து கொண்டனர்.