ஓட்டப்பிடாரம், டிச. 18: மாவட்டத்தில்விளைநிலங்களில் மழை வெள்ளம் பாதித்த அனைத்துப் பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர். ராகவன், செயலர் பெருமாள் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும், தொடர் மழை வெள்ளத்தால் அனைத்துப் பயிர்களுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே மத்திய, மாநில அரசுகள் பயிரிட்ட நிலங்களின் உச்சவரம்புகள் ஏதுமின்றி, ஏக்கருக்கு ரூ. 15ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும்.
இந்த நிவாரணத்தை அனைத்துப் பயிர்களுக்கும் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயிகளைத் திரட்டி இம் மாதம் 20-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனர் அவர்கள்.