கோவில்பட்டி, டிச. 26: கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தவர் சனிக்கிழமை இறந்தார்.
சிதம்பரம்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த வீரய்யா மகன் முத்துராமலிங்கம் (53).
இவர் தன் நண்பரான அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்துவுடன் (49) கோவில்பட்டியிலிருந்து கயத்தாறுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சவலாப்பேரியில் சென்றபோது, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாம். இதில், முத்துராமலிங்கம் உள்ளிட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முத்துராமலிங்கம் சனிக்கிழமை இறந்தார்.
புகாரின் பேரில் கயத்தாறு போலீஸôர் வழக்குப் பதிந்து, கார் ஓட்டுநர் சென்னையைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முரளிதுரையைக் கைது செய்து, விசாரித்து
வருகின்றனர்.