ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்

கோவில்பட்டி, ஜன.12:  தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை கூட்டம் இங்கு நடைபெற்றது.  சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் சம்பள விகிதங்களும்,  அதற்குரிய குறைந்தபட்

கோவில்பட்டி, ஜன.12:  தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கோவில்பட்டி கிளை கூட்டம் இங்கு நடைபெற்றது.

 சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் சம்பள விகிதங்களும்,  அதற்குரிய குறைந்தபட்ச ஓய்வூதியமும் பற்றி தெரிவிக்கப்பட்டது.

 கூட்ட அறிக்கையை செயலர் கேசவன் வாசித்தார்.

பொருளாளர் பட்டன் வரவு,  செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து, 23-வது ஆண்டு விழா சம்பந்தமான  கருத்துகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. பின்னர், புதிய உறுப்பினர்களான  பரமானந்தம், அக்கையா, முருகையா ஆகியோரை கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

 சங்க உறுப்பினர் அய்யனார் வரவேற்றார். சுந்தரம் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com