கடையநல்லூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூர், ஜன. 12: கடையநல்லூரில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.   இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் மாணிக்கபோஸ் கலந்துகொண்டு வாகனங்களின் முகப்பு

கடையநல்லூர், ஜன. 12: கடையநல்லூரில் ஓட்டுநர் பயிற்சி நிறுவனம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

  இதில், தீயணைப்பு நிலைய அலுவலர் மாணிக்கபோஸ் கலந்துகொண்டு வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர்களை ஒட்டினார். ஓட்டுநர் பயிற்சி நிறுவன பயிற்றுநர் நாராயணன், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ராஜேந்திரன், சரவணன், கருப்பசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் மாரியப்பன், காசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  இதேபோல, கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் சங்கரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

   பேரணியை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி தொடக்கிவைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் கணினி மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்த தகவல்களை மாணவர்கள் வாகன ஓட்டிகளுக்கு காட்டினர்.  பின்னர் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இப் பள்ளி மாணவர் ஆகாஷ்மாரி பரிசு பெற்றார். அவரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அருணாசலம், கூடுதல்  உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஆரோன்பொன்ராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அப்துல்கபார்கான் உள்ளிட்டோர் பாராட்டினர்.

மனித உரிமைகள் கழகம்: மனித உரிமைகள் கழகம் சார்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர்கள் செல்வி, அமிர்தானந்தசாமி, அமைப்பின் நிர்வாகிகள் மக்தூம், ஜஹான், காஜாமுகைதீன், செய்யதுஅலி, ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com