குடும்ப அட்டையில் விநோதம்: ஊழியர்களின் கவனக்குறைவால் அவதியுறும் பெண்

கடையநல்லூர்,ஜன.12: கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி பகுதியில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் பெயர் மாற்றப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதால் பயனாளி சிரமப்பட்டு வருகிறார்.   சொக்கம்பட்டி காளிய

கடையநல்லூர்,ஜன.12: கடையநல்லூர் அருகேயுள்ள சொக்கம்பட்டி பகுதியில் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் பெயர் மாற்றப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதால் பயனாளி சிரமப்பட்டு வருகிறார்.

  சொக்கம்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் காளியம்மாள். இவருக்கு வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டையில் இவரது பெயர் காளியம்மாள் என்பதற்கு பதிலாக கீரல் காளியம்மாள் என அச்சிடப்பட்டுள்ளது.

  பொதுவாக கையெழுத்து போடத் தெரியாதவர்கள் கைரேகை வைப்பார்கள். அப்படி கைரேகை வைப்பவர்களின் பெயரை  தெரிந்து கொள்ள வசதியாக கைரேகைக்கு கீழே கீரல் என்று குறிப்பிட்டு அவரது பெயரை எழுதுவது வழக்கம்.

  அதுபோல, காளியம்மாளின் குடும்ப அட்டை விண்ணப்பத்தை பரிசீலித்த ஊழியர்கள் அவரது கைரேகைக்கு கீழே குறிப்பிடப்படிருந்த கீரல் என்பதையும் சேர்த்து கீரல் காளியம்மாள் என நினைத்து அநத பெயரை அப்படியே குடும்ப அட்டையிலும் அச்சடித்து வழங்கி விட்டனர்.

  ஆனால், இவர் பெற்றுள்ள வாக்காளர் அடையாள அட்டையில் காளியம்மாள் என்ற பெயர்தான் உள்ளது.

இந்த பெயர்க் குழப்பத்தால் வங்கி உள்ளிட்ட இடங்களில் குடும்ப அட்டையில் உள்ள பெயரும் மற்ற ஆவணங்களில் உள்ள பெயரும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்க பெரிதும் அவதியுற்று வருவதாக காளியம்மாள் தெரிவித்தார்.

  எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் இந்தக் குறையை சீரமைக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com