தீ விபத்தில் சிறுமி சாவு

தூத்துக்குடி, ஜன.12:  தூத்துக்குடி அருகே சமையல் செய்த போது ஸ்டவ் வெடித்து சிறுமி இறந்தார்.  தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரத்தை சேர்ந்தவர் ச. முருகன் (47). இவர்,  தனது வீட்டை இடித்துவிட்டு புதி

தூத்துக்குடி, ஜன.12:  தூத்துக்குடி அருகே சமையல் செய்த போது ஸ்டவ் வெடித்து சிறுமி இறந்தார்.

 தூத்துக்குடி அருகேயுள்ள குமரெட்டியாபுரத்தை சேர்ந்தவர் ச. முருகன் (47). இவர்,  தனது வீட்டை இடித்துவிட்டு புதிதாக அதே இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதனால்,  அவரது குடும்பத்தினர் அந்த வீட்டிற்கு எதிரே குடிசை அமைத்து வசித்து வந்தனர்.

 இந்த நிலையில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்காக முருகனின்  மகள் சரண்யா (14) டீ தயாரித்துள்ளார். இதற்காக வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்  ஸ்டவ்வை அவர் பற்றவைத்தபோது, எதிர்பாராதவிதமாக ஸ்டவ் வெடித்து குடிசை தீப்பிடித்துக் கொண்டது. இதில், பலத்த தீக்காயமடைந்த காயமடைந்த சரண்யாவை உடனடியாக தூத்துக்குடி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே  அவர் இறந்தார்.

 இது தொடர்பாக தூத்துக்குடி சிப்காட் போலீஸôர் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி  வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com