தூத்துக்குடி கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா

தூத்துக்குடி, ஜன.12:  தூத்துக்குடியில் உள்ள கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா  நடைபெற்றது. மாணவியர் பொங்கலிட்டு மகிழந்தனர்.  தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்

தூத்துக்குடி, ஜன.12:  தூத்துக்குடியில் உள்ள கல்லூரிகளில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா  நடைபெற்றது. மாணவியர் பொங்கலிட்டு மகிழந்தனர்.

 தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல்  விழாவுக்கு கல்லூரி முதல்வர் தாமோதரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக  தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரி தாவரவியல் பேராசிரியை எம். குளோரி  கலந்துகொண்டார்.

 மாணவியர் புதுப்பானையில் பச்சரிசி பொங்கல் வைத்தனர். கரும்பு, மஞ்சள் குலை  வைத்து பூஜை செய்யப்பட்டது. மாணவியருக்கு கோலப்போட்டி, சைக்கிள் போட்டி  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை  நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 தூத்துக்குடி ஏ.பி.சி.வீ. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல்  விழாவுக்கு கல்லூரிச் செயலர் சுப்புலட்சுமி சொக்கலிங்கம் தலைமை வகித்தார். கணிதத்துறைப் பேராசிரியை மீனாகுமாரி பொங்கல் பூஜை நடத்தினார். கல்லூரி  இசைக்குழுவைச் சேர்ந்த மாணவியர் பக்திப் பாடல்களை பாடினர். கல்லூரியில் கலைக் குழு சார்பில் ஆடை அலங்காரம், சிகை அலங்காரம், கிராமிய  நடனம், பரதநாட்டியம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவியர் சமத்துவப் பொங்கல் வைத்தனர். ஏற்பாடுகளை கல்லூரி  முதல்வர் பச்சை நாயகி மற்றும் பேராசிரியைகள் செய்திருந்தனர்.

 தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல்  விழாவுக்கு கல்லூரி முதல்வர் அருள்சகோதரி அருளானந்த மேரி தலைமை வகித்தார்.  செயலர் ரோஸ்மேரி முன்னிலை வகித்தார். சாதி, சமய, இன, மொழி வேறுபாடற்ற  சமத்துவ சமுதாயம் உருவாக வலியுறுத்தி சமத்துவப் பொங்கல் வைக்கப்பட்டது.  ஒவ்வொரு துறை சார்பிலும் தனித்தனியாக மாணவியர் பொங்கலிட்டு மகிழந்தனர்.

 மேலும், மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com