தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் வார விழா

தென்காசி, ஜன.12:  தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் வார விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. ந.முத்தையா தலைமை வகித்தார். செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன்  அறிக்கை சமர்ப்பித்து வரவேற்றார்.  துணைச் ச

தென்காசி, ஜன.12:  தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் வார விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. ந.முத்தையா தலைமை வகித்தார். செயலர் ஆ.சிவராமகிருஷ்ணன்  அறிக்கை சமர்ப்பித்து வரவேற்றார்.

 துணைச் செயலர் இரா.குத்தாலிங்கம் "ஒப்புரவறிதல்' பற்றிய விளக்கமளித்தார். மா.சங்கிலிரத்தினம் "இடுக்கணழியாமை' பற்றியும், சி.க.சாமி "கடவுள் வாழ்த்து' பற்றிய விளக்கமும், ஆர்.சுப்பிரமணியம் "முகலாய மன்னர்களின் சிறப்பு' பற்றியும் பேசினர். கவிஞர் சுடலைமுத்து "தேசபக்தி' பற்றியும், எம்.மாடசாமி "நல்லவர்கள்' என்ற தலைப்பிலும், பெ.இராமநாதன் "திருக்குறள் முரண்' பற்றியும், எஸ்.பி.இளங்கோ  "நாட்டு நடப்பு' பற்றியும், இலக்குமணபெருமாள் "கம்பனின் நயம்' பற்றியும் உரையாற்றினர்.  புலவர் கா.ச.பழனியப்பன் குறட்பாவை கூறி ஆய்வுரை தந்து பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com