நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா நாளை துவக்கம்

கருங்கல், ஜன. 12:கருங்கல் அருகே உள்ள நட்டாலம் இறை ஊழியர் தேவசகாயம்பிள்ளை திருத்தல திருவிழா ஜன-14 ல் துவங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.   விழாவின் முதல் நாள் மறை மாவட்ட விழாவாகக் கொண்டாடப்படுகிறது.   துவக

கருங்கல், ஜன. 12:கருங்கல் அருகே உள்ள நட்டாலம் இறை ஊழியர் தேவசகாயம்பிள்ளை திருத்தல திருவிழா ஜன-14 ல் துவங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.

  விழாவின் முதல் நாள் மறை மாவட்ட விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

  துவக்க நாள் தேவசகாயம்பிள்ளை நினைவு சுடரோட்டமானது வடக்கன்குளம்,ஆரால்வாய்மொழி,குளச்சல்,புலியூர்குறிச்சி,களியக்காவிளை உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்களால் நட்டாலம் தருதலத்திற்கு மாலை 4.30 மணிக்கு கொண்டு வரப்படுகிறது. இச் சுடரை பாளையன்கோட்டை மேதகு ஆயர் ஜூட் பால்ராஜ் வரவேற்றுப் பெற்றுக் கொள்கிறார்.

  இதைத் தொடர்ந்து நடைபெறும் கூட்டுத் திருப்பலிக்கு பாளையங்கோட்டை ஆயர் மேதகு ஜூட் பால்ராஜ் தலைமை வகிக்கிறார். கோட்டார்மறை மாவட்ட குருகுல முதல்வர் மரியதாசன் முன்னிலை வகிக்கிறார். கூட்டுத் திருப்பலியில்கோட்டார் மறை மாவட்ட அருள் தந்தையர்கள்,அருள்சகோதரிகள், மறை மாவட்ட பங்குமக்கள் பங்கேற்கின்றனர்.

  விழாவின் 2, 3-ம் நாள்களில் மாலை ஜெபமாலை,புகழ்மாலை திருப்பலி உள்ளிட்டவை நடைபெறும். கடைசிநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஜெபமாலை,புகழ்மாலை, திருப்பலியைத் தொடர்ந்து அன்புவிருந்து நடைபெறும்.

 ஏற்பாடுகளை முள்ளங்கனாவிளை பங்கு பணியாளர் அருள்தந்தை பென்னி மற்றும் விழாக் குழுவினர் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com