பாபநாசத்தில் ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி

அம்பாசமுத்திரம், ஜன.12: பாபநாசம் அருகே முண்டன்துறையில் செவ்வாய்க்கிழமை ஆற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் இறந்தனர்.  மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் செந்தில்குமார் (21). இவர்  அஞ்சல் வழியி

அம்பாசமுத்திரம், ஜன.12: பாபநாசம் அருகே முண்டன்துறையில் செவ்வாய்க்கிழமை ஆற்றில் மூழ்கி மாணவர்கள் இருவர் இறந்தனர்.

 மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த கோபால் மகன் செந்தில்குமார் (21). இவர்  அஞ்சல் வழியில் பிகாம் சிஏ படித்து வருகிறார். தூத்துக்குடியை சேர்ந்த ஜெயராமன்  மகன் விஷ்ணு (22). இவர் சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து  வருகிறார். மதுரை கல்லுபட்டியைச் சேர்ந்த ராம்கண்ணா அங்குள்ள கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த யோகேஷ், திருச்சியைச் சேர்ந்த  முகம்மதுதமீம் ஆகியோர் விஷ்ணுவுடன் சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

 நண்பர்களான இவர்கள் தங்கள் நண்பர் தூத்துக்குடியைச் சேர்ந்த இதயகுமாரின்  சகோதரி திருமணத்தில் கலந்துகொள்வதற்காக திங்கள்கிழமை தூத்துக்குடி வந்தனர்.  திருமணம் முடிந்ததும் செந்தில்குமார், விஷ்ணு உள்ளிட்ட 5 பேரும் பாபநாசம்  முண்டன்துறையில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

 செவ்வாய்க்கிழமை காலை செந்தில்குமார், விஷ்ணு, ராம்கண்ணா, யோகேஷ், முகம்மதுதமீம் ஆகியோர் முண்டன்துறையில் கன்னிமான்துறை என்ற இடத்தில் குளிப்பதற்காகச் சென்றனர். ஏற்கெனவே அப் பகுதியில் குளிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை அறிவிப்பு வைத்துள்ளது. அதைப் பொருட்படுத்தாத மாணவர்கள் 5 பேரும் ஆற்றில் குளிக்க இறங்கினர். அங்கு ஆழமான பகுதியில் குளித்த செந்தில்குமார், விஷ்ணு ஆகியோருக்கு நீச்சல்  தெரியாததால் சுழலில் சிக்கிக் கொண்டனராம். உடன் வந்த மூவருக்கும் நீச்சல்  தெரியாததால் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. நண்பர்கள் கண்முன்  செந்தில்குமார், விஷ்ணு இருவரும் மூழ்கி இறந்தனர்.

 அவர்களது சடலத்தை முண்டன்துறை சரக வன ஊழியர்கள் மீட்டனர். போலீஸôர்  அவர்களது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 இளைஞர் சாவு: விக்கிரமசிங்கபுரம் பூந்தோட்டம் தெருவைச் சேர்ந்த ஈனமுத்து மகன்  பாபுபிரசாத் (22). தூத்துக்குடியில் டேங்கர் லாரியில் கிளீனராக வேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை மாலை நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக  பாபநாசம் சென்றார்.

 பாபநாசத்தில் கோயிலுக்கு தென்பகுதியில் தலையணைக்கு செல்லும் வழியில் ஆற்றில்  பாபுபிரசாத் குளித்துக் கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் உள்ள பாறையில் பாபுபிரசாத் சிக்கிக்  கொண்டாராம். உடனடியாக ஆற்றில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த அவரை  நண்பர்கள் துணியைக் கட்டி இழுத்து காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் மூச்சுத்  திணறி பாபுபிரசாத் இறந்தார்.

 அம்பாசமுத்திரம் தீயணைப்புப் படையினர் நிலைய அலுவலர் (பொறுப்பு)  செய்யதுதாக்கீர் தலைமையில் சென்று பாபு சடலத்தை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com