பேச்சிப்பாறையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

குலசேகரம், ஜன. 12: பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் குலசேகரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் பேச்சிப்பாறையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் ஞாயிற்றுக்கி

குலசேகரம், ஜன. 12: பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் குலசேகரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் பேச்சிப்பாறையில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

  பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் பள்ளியில் இம் முகாமை பேச்சிப்பாறை பள்ளித் தலைமை ஆசிரியர் பி. பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். இதில்,  குலசை நடராஜன், சிந்துகுமார், உடல்கல்வி ஆசிரியர் சந்திர சோமு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.   முன்னதாக, பேச்சிபாறை பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எம். சுந்தரம் வரவேற்றார். குலசேகரம் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நெல்சன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com