பேச்சுப்போட்டி:கல்லிடைக்குறிச்சி மாணவிக்கு முதல் பரிசு

அம்பாசமுத்திரம், ஜன. 12: சேரன்மகாதேவி ஒன்றிய அளவில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் கல்லிடைக்குறிச்சி மாணவி அ. ஆமீனா முதல் பரிசு பெற்றார்.   சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வ

அம்பாசமுத்திரம், ஜன. 12: சேரன்மகாதேவி ஒன்றிய அளவில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் கல்லிடைக்குறிச்சி மாணவி அ. ஆமீனா முதல் பரிசு பெற்றார்.

  சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து ஒன்றிய, மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது. சேரன்மகாதேவி ஒன்றிய அளவில் நடைபெற்ற இப் பாட்டியில் கல்லிடைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி அ. ஆமீனா கலந்து கொண்டு பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றார்.

  வெற்றி பெற்ற மாணவியை பாராட்டி சேரன்மகாúத்தவி உதவி தொடக்க கல்வி அலுவலர் ஷீலாரமணி, கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் நி. வனிதாதமிழ்செல்வி ஆகியோர் பரிசு வழங்கினர்.

இதையடுத்து பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி சசிகலா மாணவி ஆமீனாவுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

மாணவியை பள்ளித் தலைமையாசிரியர் ச. ஜேம்ஸ், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com