மானூர் அருகே கிணற்றில் விழுந்து பள்ளி மாணவர் சாவு

திருநெல்வேலி, ஜன. 12:   திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே கிணற்றில் விழுந்து பள்ளி மாணவர் இறந்தது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   மானூர் அருகே உள்ள வெங்கலப்பொட்டலைச் சேர்ந்த ஆறுமுக ந

திருநெல்வேலி, ஜன. 12:   திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே கிணற்றில் விழுந்து பள்ளி மாணவர் இறந்தது குறித்து போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மானூர் அருகே உள்ள வெங்கலப்பொட்டலைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் விஜயகுமார் (13). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

  விஜயகுமார் சில நாள்களுக்கு முன்பு திடீரென காணாமல் போய்விட்டாராம். விஜயகுமாரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.   இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை ஆறுமுகநயினாருக்கு சொந்தமான கிணற்றின் தண்ணீரில் விஜயகுமாரின் சடலம் மிதந்தது.  இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப் பகுதி மக்கள், மானூர் போலீஸôருக்கு தகவல் தெரிவித்தனர்.

  போலீஸôர் சம்பவ இடத்துக்கு சென்று, விஜயகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது குறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com