லாரி மீது கார் மோதல்: 4 பேர் படுகாயம்

கோவில்பட்டி, ஜன. 12:  தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலை  ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில், 4 பேர் படுகாயமடைந்தனர்.  சேலம் மாவட்டம், ஓமலூரையடுத்த

கோவில்பட்டி, ஜன. 12:  தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலை  ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில், 4 பேர் படுகாயமடைந்தனர்.

 சேலம் மாவட்டம், ஓமலூரையடுத்த தளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்(38). வழக்கறிஞரான இவர், மனைவி வசந்தா, மகன் வேல்மணியுடன் காரில்  திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தார். காரை ராஜசேகர் (20) என்பவர் ஓட்டி வந்தார்.

 எட்டையபுரம் அருகே கருங்காலிப்பட்டி விலக்கில் தூத்துக்குடியிலிருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்த லாரி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அந்த லாரி மீது கார் மோதியது. இதில் காரில் இருந்த கார்த்திக் உள்ளிட்ட 4 பேரும் பலத்த  காயமடைந்தனர்.

 நாலாட்டின்புத்தூர் போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்,  தீவிரசிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com