வங்கி பெண் ஊழியரை கேலி செய்த இளைஞர் கைது

கருங்கல், ஜன. 12: கருங்கல் அருகே வங்கி பெண் ஊழியரை கேலி செய்ததாக இளைஞரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.   நித்திரவிளை அருகே உள்ளே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி ஜெயஷீஜா (

கருங்கல், ஜன. 12: கருங்கல் அருகே வங்கி பெண் ஊழியரை கேலி செய்ததாக இளைஞரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

  நித்திரவிளை அருகே உள்ளே காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. இவரது மனைவி ஜெயஷீஜா (23). இவர் கருங்கலில் ஒரு அரசு வங்கியில் பணி செய்து வருகிறார்.  செவ்வாய்க்கிழமை காலை வங்கிப் பணிக்காக புதுக்கடையிலிருந்து தனியார் வேனில் கருங்கலுக்கு சென்று கொண்டிருந்தார். தொலையாவட்டம் பகுதியில் வேன் சென்றபோது அங்கிருந்து திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த மரியமிக்கேல் மகன் கிறிஸ்துதாஸ் (31),  ஜெயஷீஜாவிடம் ஆபாசமாக பேசியதுடன் கேலி செய்தாராம்.   இதையடுத்து, ஜெயஷீஜா போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸôர் வழக்குப் பதிந்து கிறிஸ்துதாசை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com