வாகனம் மோதி தொழிலாளி சாவு

கோவில்பட்டி, ஜன.12:  கோவில்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி இறந்தார்.  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு (60). கூலித் தொழி

கோவில்பட்டி, ஜன.12:  கோவில்பட்டியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி இறந்தார்.

 கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணு (60). கூலித் தொழிலாளியான இவர், பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் திங்கள்கிழமை மஞ்சள் குலை, வாழை  வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

 இந்நிலையில், எஞ்சிய மஞ்சள்குலை, வாழையை செவ்வாய்கிழமை விற்பதற்காக சாலை  ஓரத்தில் வைத்துவிட்டு அதனைப் பாதுகாக்கும் பொருட்டு, அதன் அருகிலேயே படுத்து  தூங்கினாராம்.

 இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவ்வழியே சென்ற பாதசாரிகள் மஞ்சள்குலை, வாழை குவிந்திருந்த இடம் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக  கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில், போலீஸôர் சம்பவ இடத்திற்குச் சென்று  விசாரித்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாரிக்கண்ணு இறந்துகிடப்பது  தெரியவந்தது.  மாரிக்கண்ணுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு  தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com