வெள்ளையடித்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

தென்காசி, ஜன.12:  தென்காசி அருகே மேலகரத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தார்.  மேலகரம் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பெ.பொன்னுசாமி (50). இவர் செவ்வாய்க்கிழமை காலையில் இதே பகுதியில் உள்ள ஒரு வீ

தென்காசி, ஜன.12:  தென்காசி அருகே மேலகரத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தார்.

 மேலகரம் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்தவர் பெ.பொன்னுசாமி (50). இவர் செவ்வாய்க்கிழமை காலையில் இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் நின்று  வெள்ளையடித்துக் கொண்டிருந்தார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக மின்வயரில் அவருடைய கைபட்டு விட்டது. இதில்  தூக்கிவீசப்பட்ட அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு  இறந்தார்.

 இதுதொடர்பாக குற்றாலம் போலீஸôர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com