திருநெல்வேலி, ஜன. 1: திருநெல்வேலி நகர அரிமா சங்கம் சார்பில் மனித உரிமைகள் தின விழா நடைபெற்றது.
சந்திப்பில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவர் கதிரேசன் தலைமை வகித்தார். செயலர் ரங்கராஜன், சீனிவாசகம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக
பிஎஸ்என்எல் முதுநிலைக் கண்காணிப்பாளர் எஸ். சுந்தரம் கலந்துகொண்டு பேசினார்.
விழாவில் பல்வேறு சாதனையாளர்களும், சேவையாளர்களும் பாராட்டப்பட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர்கள் ஜானகிராம் அந்தோனி, ஏ. லட்சுமணன், ஜெ. கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.