திருநெல்வேலி, ஜன. 1: சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி பாளையங்கோட்டையில் சனிக்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சனிக்கிழமை தொடங்கி ஒருவாரம் 22-வது சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்கமாக பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வுப் பேரணியை ஆட்சியர் மு. ஜெயராமன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தது.
நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பொன் செந்தில்நாதன், வாகன ஆய்வாளர்கள் வெங்கடகிருஷ்ணன், ஆனந்தவேல், விநாயகம் மற்றும் ஓட்டுநர் பள்ளி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.