திருநெல்வேலி, ஜன. 1: திருநெல்வேலி அருகே இளம்பெண் ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சீவலப்பேரியை அடுத்துள்ள மடத்துப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். கூலித் தொழிலாளியான இவர் மனைவி செல்வமணி (22). இத் தம்பதிக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. 10 மாத குழந்தை உள்ளது.
செல்வமணி தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், அவர் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
சீவலப்பேரி போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர். திருநெல்வேலி கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.