கோவில்பட்டி, ஜன. 1:விளாத்திகுளம் அருகே ஜே.சி.பி. வாகன பக்கெட் விழுந்ததில் மாணவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திருப்பதி என்பவருக்குச் சொந்தமான ஜே.சி.பி. வாகனத்துக்கு கோட்டநத்தத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஓட்டுநராக இருந்து வருகிறாராம்.
வெம்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே இவ்வாகனத்தில் பழுது பார்க்கும் பணியில் சீனிவாசன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் ஈடுபட்டார்களாம்.
அப்போது ஜே.சி.பி வாகனத்தின் பக்கெட் வெம்பூரைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் மாரிச்சாமி(15) மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்தவுடன் மாசார்ப்பட்டி போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று மாரிச்சாமி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.