ஸ்ரீவைகுண்டம், ஜன. 22: மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி சார்பில் ஒய்யான்குடி கிராமத்தில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில், மாணவர்கள் மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுத்தப்படுத்தினர். தலைமையாசிரியர் சாமுவேல் தர்மராஜ் தலைமை வகித்தார். திட்ட அலுவலர் ஜெப மரிய ஸ்டெல்லா, மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.