திருநெல்வேலி, ஜன. 22: திருநெல்வேலி அரசு மருத்துவமனையை, மருத்துவக் கல்வி இயக்ககக் குழு சனிக்கிழமை ஆய்வு செய்தது.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் வம்சதாரா தலைமையிலான இக் குழு, இங்குள்ள மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுளில் ஆய்வு செய்தது. குழந்தைகள் வார்டு, எலும்பு முறிவு பிரிவுகளைச் சுற்றிப்பார்த்த குழுவினர் சில ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்டவை குறித்து இக் குழுவினர் கேட்டறிந்தனர். மருத்துவமனைக் கண்காணிப்பாளர்
ஜிம்லா பாலச்சந்திரன் உடனிருந்தார்.