கோவில்பட்டி, ஜன. 22: கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியில் சனிக்கிழமை கூலித் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்தார்.
தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த அழகுமலை மகன் முருகன் (45). கூலித் தொழிலாளியான இவர், கோவில்பட்டி வேலாயுதபுரத்திலுள்ள தங்கை மாரியம்மாள் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தாராம். தண்டவாளம் அருகே சென்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது.