கடையநல்லூர்,ஜன.29: கடையநல்லூர் வட்டார வள மையம் சார்பில் பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.மேற்பார்வையாளர் அப்துல் கபார்கான் தலைமை வகித்தார். வழக்குரைஞர் பி.எஸ். அருள்ராஜ் கலந்து கொண்டு கிராமக் கல்விக்குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.
கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் இக்பால், சங்கரவடிவு,ஜெயலட்சுமி,மேரிநெஸ்பல், சுகந்தி, ஜெயந்தி, ஜன்னத்பிர்தெüஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.