தூத்துக்குடி, ஜன. 29:தூத்துக்குடி மாவட்ட மாணவர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டி.ஆர். விஜயசீலனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மதுரையில் ஜன. 25-ம் தேதி நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் தேர்தலில் எஸ்.எம். அருள்ராஜ் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராகவும், சாமுவேல் பிரேம்குமார் துணைத் தலைவராகவும், எஸ். சிவக்குமார், செல்வமுத்து மேகலா, பரிமளா செல்வி ஆகியோர் செயலர்களாகவும் வெற்றிபெற்றனர்.
இவர்கள், எஸ்.டி.ஆர். விஜயசீலனை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் தொழிலாளர் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எம். பார்த்தீபன், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர்கள் குமரன், சிங்கப்பன், விளாத்திகுளம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் எம். திருப்பதி, திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் ஜே. ஜெயசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.