தூத்துக்குடி,ஜன.29:தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற ஏழைகளுக்கு வட்டி மானியத்துடன் வீடு கட்ட கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட, வீடு வாங்க, ஓட்டு வீடு மற்றும் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றிட வட்டி மானியத்துடன் கடன் வழங்கப்படும்.
இத் திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் மற்றும் குறைந்த வருமானம் உள்ள பிரிவினர்கள் உரிய படிவத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு மாத வருமானம் ரூ. 5000 வரை இருக்க வேண்டும். ரூ. 1 லட்சம் வரை கடன் வழங்கப்படும். குறைந்த வருவாய் பிரிவினருக்கு மாத வருமானம் ரூ. 5001 முதல் 10 ஆயிரம் வரை இருக்க வேண்டும். ரூ. 1.60 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.விண்ணப்பத்துடன் பட்டா, பத்திர நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வருமானச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை நகல், வில்லங்கச் சான்று ஆகியவைகளை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.