ஓட்டப்பிடாரம், ஜன. 29: புதியம்புத்தூரில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியர் கலந்துகொண்டார்.
புதியம்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியர் சி.நா. மகேஸ்வரன் தலைமை வகித்தார். புதியம்புத்தூர் பகுதியில் நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு விற்பனைசெய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி பெண்கள் ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பரிசுகள் வழங்கினார். கான்கிரீட் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் அதன் பயனாளிகளுக்கு வீட்டின் சாவிகளையும் அவர் வழங்கினார்.ஊராட்சித் தலைவர் பொ. ஜெபராஜ், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் க. மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜாமணி, ஐ. செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.