களக்காடு, ஜன. 29:களக்காடு அருகேயுள்ள புலியூர்குறிச்சி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு தின பேரணி நடைபெற்றது.
பேரணியை ஊராட்சி ஒன்றியத்தலைவர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். பேரணிக்கு புலியூர்குறிச்சி ஊராட்சிமன்றத் தலைவர் திருமலைப்பாண்டியன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், பீபீஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது ஊராட்சிப் பகுதியில் சிதறிக் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள் 20 சாக்குப் பைகளில் சேகரிக்கப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மூலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு அனுப்பப்பட்டன. அவை தாழையூத்து சிமென்ட் தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்படுகின்றன.