கன்னியாகுமரி, ஜூலை 3: ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க கருத்தரங்கம் நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.
÷கருத்தரங்குக்கு ஞானராபின்சன் தலைமை வகித்துப் பேசினார்.
÷கருத்தரங்கில் ஊழலை ஒழிப்பதில் எழுத்தாளனின் பங்கு என்ற தலைப்பில் எழுத்தாளர் பொன்னீலன், விழிப்புணர்வு செயல் திறன் என்ற தலைப்பில் காந்தி கிராம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கருணாகரன், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் சிந்திகையாள், ஊழலற்ற இந்தியாவை உருவாக்க மக்கள் பங்களிப்பு என்ற தலைப்பில் இந்தியாவின் ஐந்தாவது தூண் அமைப்பின் பொதுச்செயலர் ரத்னபாண்டியன், ஊழலற்ற இந்தியாவை உருவாக்க மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்ற தலைப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. முகம்மது இஸ்மாயில், ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதில் சமயங்களின் பங்கீடு என்ற தலைப்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ்.ஆர்.டானியல் மற்றும் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர்.
÷கருத்தரங்கில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சரோஜா வரவேற்றார். முன்னாள் தலைமை ஆசிரியர் எ.எம்.மத்தியாஸ் நன்றி கூறினார்.