கன்னியாகுமரி, ஜூலை 3:÷கன்னியாகுமரி பழைய பஸ்நிலையம் எதிரே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவும் விழா காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது.
÷காந்தி காமராஜ் ராஜீவ் தேசிய அறக்கட்டளை சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது.
÷இதற்கான 9 அடி பீடம் அமைக்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.
÷சென்னை மீஞ்சூரில் செய்யப்பட்டு வரும் இந்த சிலை ஜூலை 15-ம் தேதி களியக்காவிளை கொண்டு வரப்படுகிறது.÷அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக சிலை எடுத்து வரப்படுகிறது. பின்னர் மார்த்தாண்டம், தக்கலை, நாகர்கோவில், சுசீந்திரம், கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி வந்தடைகிறது. பின்னர் சிலை நிறுவும் விழா நடைபெறுகிறது.
÷விழாவில் சிலை அமைப்புக் குழுத் தலைவர் ராஜகோபால், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப், விஜயதரணி, மாநில வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஏ.எம்.டி.செல்லத்துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் கிருஷ்ணபிள்ளை, அகஸ்தீஸ்வரம் வட்டாரத் தலைவர் தாணுலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.