தக்கலை அருகே கேரளத்துக்கு மணல் கடத்த முயன்ற லாரி பறிமுதல்: ஓட்டுநர் கைது

தக்கலை, ஜூலை 3 :÷தக்கலை அருகே கேரளத்துக்கு லாரியில் மணல் கடத்த முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸôர் கைது செய்து லாரியையும்   பறிமுதல் செய்தனர். ÷தக்கலை அருகே புலியூர்குறிச்சியில்  மார்த்தாண்டம் காவல் நி
Published on
Updated on
1 min read

தக்கலை, ஜூலை 3 :÷தக்கலை அருகே கேரளத்துக்கு லாரியில் மணல் கடத்த முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸôர் கைது செய்து லாரியையும்   பறிமுதல் செய்தனர்.

÷தக்கலை அருகே புலியூர்குறிச்சியில்  மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுநாதன் மற்றும் போலீஸôர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ÷அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அரசு அனுமதியின்றி மணல் திருவனந்தபுரத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது.

÷இதையடுத்து எறும்புகாடு புல்லுவிளையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தாணுலிங்கத்தை (35) போலீஸôர் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.

÷இதுகுறித்து தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.