கோவில்பட்டி, ஜூலை 3:
கோவில்பட்டி அருகேயுள்ள மூப்பன்பட்டி ஊராட்சி பகுதியில் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவில்பட்டி பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதி ரமேஷ்மூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் முதல்வருக்கு அனுப்பிய மனு: மூப்பன்பட்டி ஊராட்சியில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கோவில்பட்டியிலுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
அவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல பஸ் வசதி இல்லை. புத்தகங்களை சுமந்தபடி ரயில்வே தண்டவாளத்தைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. முதியோர், பொதுமக்கள் மருத்துவமனை, தினசரி சந்தைக்குச் செல்ல இயலாமல் அவதிப்படுகின்றனர். எனவே, நாள்தோறும் 4 முறை இயங்கிவந்த ஆவல்நத்தம் பஸ்ûஸ மூப்பன்பட்டி கிராமம் வழியாக செல்ல மீண்டும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.