குலசேகரம், ஜூலை 3:÷கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகே பெட்டிக்கடையில் டாஸ்மாக் மது விற்பனை செய்தவரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
÷மாவறவிளையைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (45). இவர் இப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். ÷இவரது கடையில் டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக திருவட்டார் போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. ÷இந்நிலையில் ஜெயசீலனின் கடையில் போலீஸôர் சோதனை நடத்தியபோது அங்கு மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
÷இதையடுத்து போலீஸôர் ஜெயசீலனை கைது செய்து மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.