மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள்

கோவில்பட்டி, ஜூலை 3:  கடம்பூர் சிதம்பராபுரம் இந்து துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகப் பை, எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.    கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ தனது சொந்த செலவில் மாணவ,
Published on
Updated on
1 min read

கோவில்பட்டி, ஜூலை 3:  கடம்பூர் சிதம்பராபுரம் இந்து துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகப் பை, எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

   கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ தனது சொந்த செலவில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்களை வழங்கினார்.

 நிகழ்ச்சியில், தலைமையாசிரியை கனகம்மாள், ஆசிரியர்கள் சிவகாமி, ஆவுடைத்தாய், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

தாப்பாத்தி பள்ளி:  புதூர் ஒன்றியம், தாப்பாத்தி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகப் பை, நோட்டுகள் மற்றும் தேர்வு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

  புதூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முனியசாமி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவி அமுதா முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயராம் வரவேற்றார்.

   மாணவ, மாணவிகளுக்கு வி.வி.எஸ். அறக்கட்டளை சார்பில் மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் அ. வரதராஜன் இலவச புத்தகப் பை, நோட்டுகள் மற்றும் தேர்வு அட்டையை வழங்கினார்.

     நிகழ்ச்சியில், கல்விக் குழுத் தலைவர் சுப்புத்தாய், ஆசிரியைகள் விக்டோரியா, மரியசெல்வி, சாந்தா, பிரபாவதி, சுமதி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை கவிதாராணி நன்றி கூறினார்.

சாத்தான்குளம்:        பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவுக்கு தலைமை ஆசிரியர் இம்மானுவேல் தலைமை வகித்தார்.

ஊர் பிரமுகர்கள் ராமசாமி, சுந்தரராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை சசிதா வரவேற்றார்.

  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களை தொழிலதிபர் வைகுண்டம், அவரது மனைவி ஜெயம் ஆகியோர் வழங்கினர்.    

விழாவில் ஆசிரியர்கள் ஜீவா, சண்முகம், விசுவாச கென்னடி, பாலன், சுபா, சபாசெல்வி, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் சுவாமிதாஸ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.