மார்த்தாண்டம், ஜூலை 3:÷திமுக உயர்நிலை செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டம் மார்த்தாண்டம் வெட்டுவெந்தியில் நடைபெற்றது.
÷குழித்துறை நகர திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு திமுக குழித்துறை நகரச் செயலரும், நகர்மன்றத் தலைவருமான பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தார்.
÷கட்சியின் குழித்துறை நகர அவைத் தலைவர் ஷெர்லி நெல்சன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மாதவன், மாவட்டப் பிரதிநிதி பப்புசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
÷முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
÷ரமேஷ் வரவேற்றார். விவசாய அணி அமைப்பாளர் தாஸ் நன்றி கூறினார்.