கோவில்பட்டி, ஜூலை 3: கோவில்பட்டியில் தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநிலச் செயலர் கந்தசாமி தலைமை வகித்தார். துணைச் செயலர் கணபதி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் ராஜ், பொன்ராமசுப்பு, ஞானமூர்த்தி, சுப்புராஜ், கணபதி, கோவிந்தராஜ், சுப்புராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உழவர் தின உரிமை போராட்டத்தின் போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜூலை 5-ம் தேதி மாநிலம் தழுவிய உழவர் தின விவசாயிகள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், விவசாயிகளின் விடியலுக்காக போராடிய நாராயணசாமி நாயுடு உயிர் நீத்த இடத்தில் அஞ்சலி செலுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.