இலவச நோட்டு புத்தகங்கள் அளிப்பு

திருநெல்வேலி, ஜூலை 9:÷தேமுதிக திருநெல்வேலி மாநகர மாவட்ட சார்பில் பள்ளி ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. ÷கட்சியின் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, த
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி, ஜூலை 9:÷தேமுதிக திருநெல்வேலி மாநகர மாவட்ட சார்பில் பள்ளி ஏழைக் குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

÷கட்சியின் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, திருநெல்வேலி நகரத்தில் உள்ள சி.எம். தொடக்கப் பள்ளியில் இவ்விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

÷விழாவுக்கு 52-வது வட்டச் செயலர் யூ. முகம்மது அனிபா தலைமை வகித்தார். அவைத் தலைவர் பி. தர்மலிங்கம், பொருளாளர் கே. ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷மாநகர மாவட்டச் செயலர் ஏ. முகம்மது அலி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.÷மாவட்ட துணைச் செயலர்கள் வி. மீனாட்சிசுந்தரம், கே. ஜெயச்சந்திரன் என். மாடசாமி, எஸ். மாரியப்பன், பகுதிச் செயலர்கள் எம். சேக், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

÷52-வது வட்ட நிர்வாகி சங்கரலிங்கம் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.