கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக நெல்லையில் மூவர் கைது

திருநெல்வேலி, ஜூலை 9:÷திருநெல்வேலியில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக மூன்று பேரை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர். ÷திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரத்தைச் சேர்ந்த வேலம்மாள் அதேப் பகுதியைச் சேர்ந்த பே
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி, ஜூலை 9:÷திருநெல்வேலியில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக மூன்று பேரை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.

÷திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரத்தைச் சேர்ந்த வேலம்மாள் அதேப் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்துவிடம் (41) இரண்டு ஆண்டுக்கு முன் ரூ. 50 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தாராம்.

÷வட்டியை வேலம்மாள் சரியாகக் கொடுக்காததால் பேச்சிமுத்து அவரை மிரட்டினாராம். மேலும்  வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் பேச்சிமுத்து மிரட்டியதாக வேலம்மாள் சந்திப்பு பாலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.÷

இதுகுறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து பேச்சிமுத்துவை கைது செய்தனர்.

÷இதுபோல சுத்தமல்லி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் மாரியப்பன். இவர் நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.÷தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் திருநெல்வேலி நகரம் புட்டாரத்தி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நெல்லையப்பன் (30) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (55) ஆகிய இருவரிடமும் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தாராம்.

÷ஆனால் வட்டியை மாரியப்பன் சரியாகக் கொடுக்க வில்லையாம். இதனால் நெல்லையப்பனும், முத்துப்பாண்டியும் சேர்ந்து தன்னை மிரட்டியதாக மாரியப்பன் திருநெல்வேலி நகர காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

÷இதையடுத்து போலீஸôர் வழக்குப்பதிந்து நெல்லையப்பன் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.