கோவில்பட்டி, ஜூலை 9:÷கோவில்பட்டியில் காணாமல் போன கூலித் தொழிலாளியை கண்டுபிடித்துத் தருமாறு அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
÷கோவில்பட்டி வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் முத்துப்பாண்டி (34). கூலித் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்ததாம்.
÷இந்நிலையில் ஜூன் 29-ம் தேதி வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லையாம்.
பல இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்காததையடுத்து, காணாமல் போன முத்துப்பாண்டியை கண்டுபிடித்துத் தருமாறு அவரது தந்தை கருப்பசாமி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
÷இதுகுறித்து போலீஸôர் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.